Kalanjiyam App மூலம் Pensioners வீட்டில் இருந்தபடியே Life Certificate அளிக்கும் வழிமுறை

naveen

Moderator



களஞ்சியம் செயலி மூலம் ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே வாழ்நாள் சான்று அளிக்கும் வழிமுறை



Procedure for Pensioners to provide Life Certificate from home through Kalanjiyam Mobile App



ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே வாழ்நாள் சான்று அளிக்க தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியுள்ள பாராட்டுக்குரிய வசதி களஞ்சியம் என்ற Mobile App மூலம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நான் இன்று எனது வாழ்நாள் சான்று அளித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தி கருவூலம் ஆணையரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.



நாம் செய்ய வேண்டியது play store சென்று களஞ்சியம் என்ற mobile app ஐ பதிவிறக்க வேண்டும்.



https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam



தங்கள் PPO போன்ற விபரங்களை உள்ளீடு செய்து நான்கு இலக்க PIN ஐ save செய்து உள்ளே சென்று Mustering என்ற option ஐ தெரிவு செய்து அதில் வரும் பச்சை நிற வட்டத்தில் தங்கள் முகத்தை கண்ணாடி இன்றி காண்பித்து இரண்டு அல்லது மூன்று முறை கண்களை சிமிட்டினால் உங்கள் வாழ்நாள் சான்று ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு அடையாளமாக SMS உடனே வந்துவிடும். இந்த முயற்சியை பகலில் மட்டும் செய்ய வேண்டும்.



நன்றி.

ஆ.மீ‌.பார்த்தீபன்

இணை இயக்குநர் ஓய்வு தஞ்சாவூர்.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock