Welcome To DailyEducation

DailyEducation is an open-source platform for educational updates and sharing knowledge with the World of Everyday students.

School Morning Prayer Activities - 03.04.2024

naveen

Moderator


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.04.2024





திருக்குறள்


பால் : பொருட்பால். இயல்: அரசியல்.

அதிகாரம்: இறைமாட்சி.



குறள்:389



செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.



விளக்கம்:

தன் செவி வெறுக்கும் படியான நிலையிலும்

குறை கூறுவோறின் சொற்களை பொறுக்கின்ற பண்பு உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.



பழமொழி :

Everything comes to him who waits.



காக்கத் தெரிந்தவனுக்கு காரியம் கைகூடும்.



இரண்டொழுக்க பண்புகள் :



1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும்.



2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்.



பொன்மொழி :



Everything comes to him who waits.



காக்கத் தெரிந்தவனுக்கு காரியம் கைகூடும்.



பொது அறிவு :



1. சர்க்கரை உற்பத்தியில் முதலாவதாக உள்ள மாநிலம் எது?



விடை: உத்திரப்பிரதேசம்



2. சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் யார்?



விடை: செங்குட்டுவன்



English words & meanings :



Ebullient - full of excitement ;உவகையில் திளைக்கிற.

eclat - general applause;மகிழ்ச்சி ஆரவாரம்.



ஆரோக்ய வாழ்வு :



பருப்புகீரை :


பருப்புக்கீரையில் அபரிமிதமான அளவில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உள்ளன. இவை நுரையீரல் பாதிப்புகளில் இருந்து காக்கக்கூடியவை.



நீதிக்கதை



சிங்கமும் பன்றியும்




ஒரு காட்டில் நிறைய மிருகங்கள் இருந்தன. அவை தமக்கு ஒரு தலைவனை ஏற்படுத்த நினைத்தன.



எல்லா மிருகங்களும் ஓரிடத்தில் ஒரு நாள் கூடின. உடல் வலிமை, வீரம், பெருந்தன்மை முதலிய பல குணங்கள் பொருந்திய சிங்கத்தைத் தமது தலைவனாகத் தேர்ந்தெடுத்தன.



அங்கு கூடியிருந்த காட்டுப் பன்றி ஒன்று மாத்திரம் சிங்கம் தலைவனாக இருப்பதை விரும்பவில்லை. சிங்கத்தினிடம் வெறுப்புடன் இருந்தது. சில நாட்கள் கழித்து ஒரு நாள் அப்பன்றியும் தலைவன் சிங்கமும் சந்தித்தன. இரண்டும் வெகுநேரம் பேசிக் கொண்டன.



பன்றி சிங்கத்தைப் பார்த்து. எனது குடும்பம் எவ்வளவு பெரியது பார்த்தீரா? எனக்கு எத்தனை குட்டிகள் ஆனால் உமக்கு இருப்பது ஒரே ஒரு குட்டி தான் என்று ஏளனம் செய்தது.



அதற்குச் சிங்கம், தாங்கள் பல குட்டிகள் பெற்று என்ன நன்மை எனது ஒரு குட்டிக்கு இணையாகுமா? சிங்கக் குட்டியல்லவா?



அதனுடைய பலமும் வீரமும் உனது குட்டிகளுக்கு வருமா? எனது குட்டி கர்ஜித்தால் உனது குட்டிகள் ஓடி ஒளியும் என்று பதில் கூறிற்று. பன்றியும் ஒன்றும் பதில் பேச முடியாமல் அவ்விடம்; விட்டுச் சென்றது.



ஞானம் விளங்க பேச வேண்டும்.



இன்றைய செய்திகள் - 03.04.2024



*உலகத்துக்கே முன்னோடியாக உள்ளது காலை உணவு திட்டம் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.



*மிச்சாங் புயலால் பாதிப்படைந்த 24 லட்சம் குடும்பங்களுக்கு ரூபாய் 1,487 கோடி நிவாரண தொகை தமிழக அரசு.



*சென்னையில் பிரமிக்க வைக்கும் சவாலான பணி- கிண்டியில் 30 மீட்டர் உயரத்தில் மேம்பாலம் மீது மெட்ரோ ரயில் பாதை.



*அடுத்த மூன்று வாரங்கள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்.



*அமோல் முஜும்தாரை பேட்டிங் பயிற்சியாளராக நியமித்தது தென்னாப்பிரிக்கா.



Today's Headlines



* Our breakfast scheme is the leading one in the world –CM Stalin's proud moment.



* Tamil Nadu government has given Rs 1,487 crore relief to 24 lakh families affected by Cyclone Michong.



*Stunning and challenging task in Chennai- Metro rail track on flyover at 30 meters height in Guindy.



*There will be an increase in heat for the next three weeks: private meteorologist's information.



*South Africa appointed Amol Mujumdar as batting coach.



Prepared by

Covai women ICT_போதிமரம்
 
Back
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock