Welcome To DailyEducation

DailyEducation is an open-source platform for educational updates and sharing knowledge with the World of Everyday students.

School Morning Prayer Activities - 12.01.2024

naveen

Moderator


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.01.2024





திருக்குறள்


பால் : அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : நிலையாமை



குறள்:335



நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யப் படும்.



விளக்கம்:



வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்.



பழமொழி :

Live not to eat, but eat to live



உண்ண வாழாதே, வாழ்வதற்காக உண்



இரண்டொழுக்க பண்புகள் :



1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.



பொன்மொழி :



உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சி உங்கள் எண்ணங்களின் தரத்தைப் பொறுத்தது. --மார்கஸ் ஆரேலியஸ்



பொது அறிவு :



1.ஜம்மு காஷ்மீரின் அரசாங்க மொழி எது?



விடை: உருது



2. இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரை கிராமம் எது?



விடை: தனுஷ்கோடி



English words & meanings :



Intermittent-periodic (இடைப்பட்ட). Insane-crazy(பைத்தியக்காரன்).



ஆரோக்ய வாழ்வு :



முருங்கை கீரை : முருங்கை இலையினுடைய பொடியானது மூளையின் ஆரோக்கியத்துக்கு மிக்ப பெரிய அளவில் உதவுகின்றது. இது அல்சைமர் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் உள்ள வைட்டமின் இ மற்றும் வைட்டமின் சி ஆகியவை மன வளம், நியாபக சக்தி ஆகியவற்றைப் பாதுகாக்க உதவுகிறது



ஜனவரி 12 இன்று



தேசிய இளைஞர் நாள்




சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான சனவரி 12 ஆம் தியதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day) என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.



1984 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்நாளினை "தேசிய இளைஞர் நாளாக" அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் சனவரி 12-ம் திகதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது



நீதிக்கதை

தவறான வழிகாட்டி




ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். அவன் மிகவும் ஊதாரியாக இருந்தான். தனது மூதாதையர் சேர்த்து வைத்திருந்த சொத்தையெல்லாம் விற்று வாழ்ந்து வந்தான். கடைசியில் அவனிடம் ஒரே ஒரு அழகான போர்வை மட்டும் எஞ்சியிருந்தது.



அவன் கோடை காலத்தில் மட்டுமே வெளியே வரும் தூக்கணாங்குருவி வகைப் பறவையை ஒருநாள் கண்டான்.



அவன் கோடை காலத்தில் மட்டுமே வெளியே வரும் தூக்கணாங்குருவி வகைப் பறவையை ஒருநாள் கண்டான்.



குளிர்காலம் முடிந்து விட்டது என்று எண்ணி வெளியே வந்திருந்த அந்தப் பறவை குளத்து நீரின் மேல் தத்தி விளையாடிய படி ஆனந்தமாக கீச்கீச் என்று பாட்டுப் பாடிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட அவன் கோடை காலம் வந்து விட்டது. ஆகவே இனி போர்வைக்கு வேலை இல்லை என்று எண்ணி அதையும் விற்றுத் தின்றான்.



ஆனால் குளிர்காலம் மீண்டும் வந்து விட்டது. குளிர் அதிகமாக இருந்தது. உறைபனி கொட்ட ஆரம்பித்தது. போர்த்திக் கொள்ளப் போர்வை இல்லாமல் அவன் வாடினான்.



ஒருநாள், அவன் சாலையில் அந்தப் பறவை இறந்து கிடப்பதைப் பார்த்தான். அவன் அதனிடம் சென்று, "அட, கேடு கெட்ட பறவையே... வசந்தம் வருவதற்கு முன்னதாக



வெளியே வந்து குளிரில் மாட்டிக் கொண்டு நீ இறந்ததும் அல்லாமல் என்னையும் இப்படி போர்வை இல்லாமல் குளிரில் வாடச் செய்து விட்டாயே” என்று புலம்பினான்.



நீதி : 'சும்மா கிடந்த சங்கை ஊதித் கெடுத்தானாம் ஆண்டி' என்பது பழமொழி. அதுபோல சும்மா இருந்தவனை கெடுத்தது அந்தப் பறவை. எனினும் நாம் நல்ல விஷயங்களை மட்டுமே முன் மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.



இன்றைய செய்திகள் - 12.01.2024



*உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகள்: முதல் இடத்தில் 6 நாடுகள்: பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின். இந்தியாவின் பாஸ்போர்ட் 80வது இடத்தைப் பிடித்துள்ளது.



*அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை- அரசாணை வெளியீடு.



*'ஸ்வச் சர்வேஷன் விருதுகள் 2023' இல் 'சிறந்த செயல் திறன் கொண்ட மாநிலங்கள்' பிரிவில் மகாராஷ்டிரா முதல் இடத்தை பிடித்தது - ஜனாதிபதி திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார்.



*ஆப்கானிஸ்தானில் கடும் நிலநடுக்கம்: 6.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.



*பொங்கல் சிறப்பு சந்தை தொடக்கம்: கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்த கரும்பு, மஞ்சள்.



* இலங்கையில் சில ஐபிஎல் போட்டிகளை நடத்துங்கள் - இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் கோரிக்கை.



Today's Headlines



*World's most powerful passports: Top 6 countries: France, Germany, Italy, Japan, Singapore and Spain. Passport of India is ranked 80th.



*Incentives for Govt Transport Employees- Promulgation of Ordinance.



*Maharashtra stands first in 'Best Performing States' category at 'Swachhservation Awards 2023' - President Draupadi Murmu presented the awards.



* Severe earthquake in Afghanistan: 6.1 Richter scale reported.



*Pongal Special Market Opened Sugarcane, Turmeric piled up for sale at Koyambedu Market.



* Hold some IPL matches in Sri Lanka requested by Sri Lanka Sports Minister



Prepared by

Covai women ICT_போதிமரம்
 
Back
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock