Welcome To DailyEducation

DailyEducation is an open-source platform for educational updates and sharing knowledge with the World of Everyday students.

அமரும் விதத்தை வைத்தே ஆளுமைத் தன்மையை கண்டறியலாம்!

naveen

Moderator



நீங்கள் எப்படி அமர்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் ஆளுமை தன்மையும் இருக்கும். சிலர் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமருவார்கள். சிலர் ஒரு காலை எடுத்து மடியில் வைத்து அமர்வார்கள். அதற்கு ஏற்றபடி அவர்களின் குணாதிசயங்கள் இருக்கும்.



கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமருதல் ( cross legged):

இப்படி அமரும் நபர்கள் எப்போதும் பகல் கனவு காண்பவர்களாக இருப்பார்கள். எப்போதும் பிறரை ஆச்சரியத்தில் ஆழ்த்த எண்ணுவார்கள். ஆனால், பிறரை எளிதில் நம்ப மாட்டார்கள். பிறர் பார்வையில் மிகுந்த தோழமை உணர்வுள்ள நபராகக் காட்சியளிப்பார்கள்.



எந்தத் தலைப்பிலும் பிறர் மனம் கவரும்படி உரையாடுவதில் வல்லவர்கள். சில விஷயங்களை தங்கள் மனதிற்குள்ளேயே மறைத்துக் கொண்டாலும் நிறைய விஷயங்களை திறந்த மனதோடு ஏற்றுக் கொள்வார்கள். பிறரை தேவையில்லாமல் மதிப்பிட மாட்டார்கள்.



தம் மனதையும் ஆன்மாவையும் திருப்திப்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள். உலகியல் விஷயங்கள் அவ்வளவாக இவர்களை ஈர்க்காது. தம் வாழ்க்கைத்துணை மேல் மிகுந்த அக்கறை உள்ளவர்கள். தம் வார்த்தையை எப்போதும் காப்பாற்றுவார்கள்.



கணுக்கால்களை ஒன்றின் மேல் ஒன்று போட்டுக் கொண்டு அமர்பவர்கள் ((Ankles crossed):

இவர்களுக்கு எப்போதும் ஒரு லட்சியமும் அதை அடைவதற்கான ஆர்வமும் இருக்கும். அதை மிக எளிதாக தங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கும் கடத்துவார்கள். மிகுந்த செழுமையான பணக்காரராக, சமூகத்தில் அந்தஸ்து உள்ளவராக இருக்க விரும்புவார்கள். பிறர் பேசுவதை மிகுந்த ஆர்வத்துடன் கேட்பார்கள். தங்கள் ரகசியத்தை இவர்களிடம் பகிர்ந்துகொள்ள பிறர் விரும்புவார்கள். ஆனால், அவற்றை ஒரு சிறிது கூட வெளியே சொல்ல மாட்டார்கள். ஆனால், அதேசமயம் தங்களைப் பற்றிய ஒரு சிறு விஷயத்தைக் கூட பிறருக்கு சொல்லவே மாட்டார்கள். தம் நிழலைக்கூட பிறர் பின் தொடர விரும்ப மாட்டார்கள். இவர்களுடைய ஆடை, அலங்காரங்கள் மிகுந்த நாகரிகமாக ஃபேஷனபிளாக இருக்கும். அது எல்லா சந்தர்ப்பங்களிலுமே வெளிப்படும். உள்ளுக்குள் எப்போதும் ஒரு சின்ன பாதுகாப்பற்ற தன்மை இருக்கும். ஆனால், அதை தங்களுடைய புன்னகையால் மறைத்துக் கொள்வார்கள்.



காதலிலும் திருமண பந்தத்திலும் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் தங்கள் பார்ட்னரை தேர்ந்தெடுப்பார்கள். எல்லாவிதமான பரிசோதனைகளும் செய்த பின்பே அவர்களை வாழ்க்கை துணையாகவோ காதலியாகவோ ஏற்றுக் கொள்வார்கள்.



வலது காலை மடித்து இடது தொடை மேல் போட்டுக்கொண்டு அமர்தல் (Figure four lock):

இவர்கள் தன்னம்பிக்கை உடையவராக, தம் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள ஆசைபடுபவர்களாக, பிறரை அதிகாரம் செய்ய விரும்புவராக இருப்பார்கள். எந்த இடத்திலும் தம் ஆளுமை தன்மையை நிரூபிக்க விரும்புவார்கள். பார்ப்பதற்கு மிகுந்த பக்குவப்பட்ட மனிதர் போல தோற்றமளித்தாலும் உள்ளுக்குள் ஒரு விளையாட்டுத்தனம் இருக்கும்.



பிறரை சார்ந்து வாழ விரும்ப மாட்டார்கள். இவர்களது நம்பிக்கையும் சுயபுரிதலும் பிறரை வசீகரிக்கும். பிறரை அடக்கி ஆள நினைத்தாலும் அதை ஒரு வசீகரமாக, கலையுணர்வுடன் செய்வார்கள். தம்மைப் பற்றி அறிந்துகொள்ள நிறைய நேரம் செலவழிப்பார்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதும் அறிவுத் தேடலிலும் அதிக ஆர்வம் இருக்கும். தம் தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் கல்வியிலும் பொது வாழ்க்கையிலும் மிகுந்த அக்கறை செலுத்துவார்கள். தங்களை பிறருக்கு நிரூபிக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். வாழ்க்கைத் துணையிடம் அவ்வளவாக எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். உணர்ச்சிப்பூர்வமாக இல்லாமல், அறிவுப்பூர்வமாகவே அவர்களை அணுகுவார்கள். மனைவி அல்லது காதலியை சுயமாக செயல்பட அனுமதிப்பார்கள்.
 
Back
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock